ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(07) (07) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்குத் தாக்கல் செய்த நபருக்கு ஒரு இலட்சம் ரூபா பணம் செலுத்துமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக என்பது தொடர்பில் கண்டறிய மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை ஆரம்பித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேற்செல் எனும் நீதிப்பேராணை (மென்டாமுஸ் ரிட்) கட்டளையிடுமாறு தக்சிலா ஜயவர்தனவின் சார்பில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் குறித்த மனு கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.