ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானமொன்று எடுப்பது அத்தியாவசியமாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் இன்று(08) நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு மேலும் தெரிவித்திருந்தார்.
குறைந்த வருமானம் பெறும் சிறார்களுக்கு புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தி இருந்தார்.