“பப்பா” கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவினரால் கைது…

கொழும்பில் அண்மைக் காலமாக இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய, பாதாள குழு உறுப்பினரொருவர் கைக்குண்டுகள் மற்றும் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவினரால் இன்று(09) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தைப் பகுதியில் வைத்தே “பப்பா” எனப்படும் 28 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளாரென்றும், மாளிகாவத்தைப் பகுதியில் பிரபல பாதாள குழுவொன்றின் உறுப்பினரும் தற்போது டுபாயில் மறைந்து வாழும் “ கஞ்சிபானி இம்ரான்“ எனப்படுபவரின் உதவியாள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2 கைக்குண்டுகளும் 5 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோய்னையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.