11 இளைஞர்கள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி உட்பட 03 சந்தேக நபர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர் இன்று(09) கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் பிரியன்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.