மஹிந்தவின் மனவருத்தம்

நிதி மோசடி விசாரணை பிரிவினால் அரச சேவையாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச சேவையாளர்கள் மதிக்கப்பட்ட வேண்டியவர்கள். எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அது உரிய முறையில் நடைபெறவில்லை எனவும் மஹித ராஜபக்ஸ குறிப்பிட்டார்.