விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப்வும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.