இருபதுக்கு 20 போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி…

இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

அதன்படி , 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றது.