
தேசிய பூங்காக்களுக்கான அனுமதிச்சீட்டுக்கள் இன்று(14) முதல் இணையத்தளத்தில்…
தேசிய வனங்கள் மற்றும் பூங்காக்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இணையத்தளங்கள் ஊடாக அனுமதிச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்க வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த முறையை உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று(14) சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்த முறையினூடாக உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் தேசிய வனங்களைப் பார்வையிடுவதற்காக, அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த இலகு முறையின் கீழ் முதலாவதாக வில்பத்து தேசிய பூங்காவுக்கான அனுமதிச்சீட்டுக்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், பின்னர் ஏனைய இடங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.