புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையில் நாளை(15) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர் மின்னழுத்தமுள்ள மின் இணைப்பு ஒன்றை வழங்குவதற்காக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பேலியகொட வெளிச்சுற்றுகையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.