பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் நிலைத் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குழப்ப நிலைத் தொடர்பில் ஆராய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழுவொன்று, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.