சேனா புழுவின் தாக்கத்தினை நிறைவு செய்ய வெளிநாட்டில் இருந்து சோளம் இறக்குமதி…

அண்மை காலமாக சோளம் பயிர்ச் செய்கையை அழித்து வந்த சேனா எனப்படும் புழுவின் தாக்கத்தினால் சுமார் 40,000 ஹெக்டேயர் பரப்பிலான சோளப் பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளது. அதன் காரணமாக வருடாந்திர சோளம் அறுவடையானது சுமார் நூற்றுக்கு 20 வீதம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேனா எனப்படும் புழுவின் தாக்கத்தினை எதிர்வு கொள்ள இதுவரையில் எவ்விஹா பூச்சி கொல்லிகளும் கண்டுபிடிக்கவில்லை எனவும், இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் வெளிநாட்டில் இருந்து சோளம் இறக்குமதி செய்ய நேரிடும் என்றும் விவசாய சங்கங்கள் மேலும் தெரிவிக்கின்றன.