சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான கணொளி வெளியீடு…

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் சிலரை கடந்த நவம்பர் 22 சித்திரவதைக்குட்படுத்திய காணொளி​யொன்றை, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று(16) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

இன்று(16), மருதானை, சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர்கள் இதனை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.