அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க 03 பேர் கொண்ட குழு…

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் சிறைச்சாலை கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நீதி அமைச்சர் தலதா அத்துகோரல 03 பேர் கொண்ட குழுவின்றை நியமித்துள்ளார்.

இது சம்பந்தமான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (21) முன்னர் வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான மூவரடங்கிய குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடியோ;