60 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கடுவல பகுதியில் நேற்றிரவு , சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 53 வயதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.