வாழைச்சேனை – மீராவோடை பகுதியில், 16 வயதான சிறுவன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று(16) இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அதற்கு முன்னதாகவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லப்பட்ட சிறுவனின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வு அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.