பெருஞ்சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது முக அழகையும் இது பாதுகாக்கிறது.
முக அழுக்குகளை போக்க:
தேவையானவை
ஓட்ஸ் 2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்
சுடு தண்ணீர்
செய்முறை :-
முதலில் பெருஞ்சீரகம் மற்றும் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். இவை கூழ்மையான பதத்திற்கு வர வேண்டுமென்றால் சிறிது வெந்நீர் சேர்த்து கொள்ளலாம். பிறகு இதனை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும்.
சுருக்கங்கள் மறைய:
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய ஒரு எளிய வழி உள்ளது. 2 ஸ்பூன் பெருஞ்சீரகத்தை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் யோகர்டுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு 1 முறை இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து போகும்.
பருக்களை போக்க:
தேவையானவை:
தேன் 1 ஸ்பூன்
ஓட்ஸ் 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்
செய்முறை :-
ஓட்ஸ் மற்றும் தேனை முதலில் அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்து போகும்.
வெண்மையான முகத்திற்கு:
தேவையானவை:
பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
செய்முறை.:
அரை கப் நீரை கொதிக்க விட்டு அதில் இந்த பெருஞ்சீரகத்தை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து இதனை இறக்கி, வடிகட்டி கொள்ள வேண்டும். இறுதியாக இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பஞ்சால் ஒத்தடம் கொடுக்கலாம். இது முகத்தை வெண்மையாக மாற்ற உதவும்.