இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இலங்கையில் முதலீடு செய்தல், காணிகளை கூலிக்கு பெற்றுக்கொள்ளுதல் போன்ற அனுகூலங்கள் முக்கியமானவை என சமிந்த ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை கோரிய மேலும் ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது. மேலும் ஐயாயிரம் பேர் இரட்டை பிரஜாவுரிமைக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.