உலகக் கிண்ண போட்டியில் பும்ரா நிச்சயம் சாதிப்பார்.. – வசீம் அக்ரம் நம்பிக்கை..

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான வசீம் அக்ரம் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், தற்போதுள்ள சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா யார்க்கர் வீசுவதில் சிறப்பாக உள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த வசீம் அக்ரம்;

“..இந்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் பும்ரா கடைசி கட்ட பந்து வீச்சில் பெரிய வித்தியாசத்தையும், தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்துவார்.

அவர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து வித்தியாசமான ஆக்சனுடன் பந்து வீசுகிறார். பும்ராவின் சிறப்பே அவர் சாதாரணமாக யார்க்கர்களை வீசும் திறமை பெற்று இருப்பதுதான். வக்கார் யூனிஸ்’போல் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியிலும் யார்க்கர் பந்து வீசுகிறார்.

அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது மிகப்பெரிய சாதனையாகும். பலவீனமான அவுஸ்திரேலிய அணியை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. உண்மையில் இந்திய அணியினர் முழு திறமையை வெளிப்படுத்தினர்…” என அவர் தெரிவித்திருந்தார்.