உலகின் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் விருதான க்ரிக் இன்போ வருடாந்த விருது விழாவில் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரருக்கான விருதுக்கு இலங்கை அணி சார்பில் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களை திமுத் கருணாரத்ன பெற்றுக் கொண்டிருந்தமையே இதற்கு காரணமாகும்.
அவ்வாறே, நியூசிலாந்து அணிக்கு எதிராக வெளின்டனில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களை குசல் மென்டிஸ் பெற்றமையினால் அவரும் குறித்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் மைதானத்தில் 2018ம் ஆண்டுக்கான குறித்த விருது விழாவில் திமுத் மற்றும் மென்டிஸ் தவிர்ந்த இன்னும் 08 வீரர்கள் குறித்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.