தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 9 மில்லிமீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதியை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மீண்டும் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்துத் துப்பாக்கிகளையும் பாதுகாப்பு அமைச்சில் சமர்ப்பிக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியுள்ளார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவைப் பாராட்டும் நிகழ்வு அக் கல்லூரியில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்