முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.