ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஐவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி…

கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் நேற்று(22) 90 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும், எதிர்வரும் 29ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

கொள்ளுபிட்டியில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் வைத்து சுமார் 1080 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வௌிநாட்டுப் பிரஜைகள் மூவரும் இலங்கைப் பிரஜைகள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.