நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்..

நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்..

2018 – 2019 ஆம் ஆண்டுகளின் பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நெல்லுக்காக நிலையான – நியாயமான விலையை பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை 18 மாவட்டங்களில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

‘சம்பா’ ரக நெல் 1Kg 41 ரூபாவுக்கும், நாடு ரக நெல் 1Kg 38 ரூபாவுக்கும்; உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு தேவையான நிதியை வழங்குவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.