அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கை நாளை(25) கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை(25) நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பந்தமாக உண்மையை கண்டறிவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டிருந்தன.
இதனை அடுத்து சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த திங்கட்கிழமை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருற்தது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் அறிக்கை நாளை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு அறிக்கையையும் ஒப்பிட்டு பார்த்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.