ஐ.தே.கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க…

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்து வரும் ஆண்டுக்கான தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் நேற்று(24) இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் சபையை எதிர்வரும் ஆண்டுக்கும் தெரிவு செய்வதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்,நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.