இந்தியன் ஒயில் நிறுவனம் (IOC) மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றால் விற்பனை செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசலை, ஒரே விலையில் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியன் ஒயில் நிறுவனமானது, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் விநியோகிக்கப்படும் விலையிலும் அதிக விலையிலேயே, எரிபொருளை விற்பனை செய்கிறது.
இந்நிலையில், அந்நிறுவனமும், எரிபொருளை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.