கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கின் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கில் மூன்று சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.

இதன் போது சாட்சியாளர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிக்ள விடுத்த கோரிக்கைக்கு அமைவாக டப்ளியூ.எம்.ஏ.எஸ் இத்தவெல மற்றும் ரொஹான் செனவிரத்ன ஆகிய இருவரும் பணி நிமித்தம் காரணமாக வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் சுரேன் பண்டார என்ற சாட்சியாளரை 15 இலட்சம் ரூபாவான 02 சரீரப் பிணையில் அவுஸ்திரேலியா செல்ல அனுமதித்துள்ள நீதிமன்றம் மீண்டும் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.