சேனா படைப்புழுக்களினால் ஏற்படும் பாதிப்பு தற்போது குறைவடைந்து வருவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
படைப்புழுக்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே, தற்போது இத்தாக்கம் குறைவடைந்து வருவதாக குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் டபிள்யு.எம்.டபிள்யு வீரகோன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், மீண்டும் இந்தத் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளமையினால், சம்பந்தப்பட்ட தரப்பினரால் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.