யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரையில் 110Kg கேரள கஞ்சாவையும் அதனைக் கடத்த முயன்ற மூன்று சந்தேக நபர்களையும் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று(26) மடக்கிப் பிடித்துள்ளனர்.
யாழ். மாதகல் கடற்பரப்பில் இருந்து வல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனையடுத்து துரிதமாகச் செயற்பட்ட கடற்படையினர் கஞ்சா கடத்தப்படுவதைப் பின்தொடர்ந்ததுடன் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இறக்கப்படுவது தொடர்பிலும் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். நிருபர் பிரதீபன்