பாராளுமன்றத்தினுள் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய அவர்கள் மீது எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த விசாரணைகளில் ஈடுபடும் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த சம்பவம் தொடர்பில் வழக்கு தொடர்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் நிலைமை தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்காக சபாநாயகர் கருஜயசூரிய, குறித்த குழுவை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.