டயானா சோப்ராவுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு உடை வாங்கிய நடிகை…

நடிகைகள் சிலர் தங்கள் செல்லப்பிராணியான நாய்க்கு கொஞ்சம் கூடுதலாகவே செல்லம் காட்டுகின்றனர்.

முத்தமிட்டு கொஞ்சுவது, மடியில் வைத்து விளையாடுவது என அதற்கொன பிரத்யேக ஏசி அறை, குஷன் பெட் வரை எல்லா வசதிகளும் செய்து தருகின்றனர்.

நடிகை பிரியங்கா சோப்ரா லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறியிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ல நாய்க்குட்டியுடன் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

விலை மதிப்பு மிக்க அந்தநாய்க்குட்டிக்கு ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலிஸ்ட்டை அமர்த்தியிருப்பதுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் தாங்க முடியாதளவுக்கு குளிர் வீசுவதால் சிறப்பு உடை ஒன்றையும் அணிவித்திருக்கிறார்.

அந்த உடையின் விலை மட்டுமே சுமார் 40 ஆயிரம் ரூபாய் ஆகும் எனவும் கூறப்படுகிறது. நாய்க்குட்டிக்கு டயானா சோப்ரா எனவும் பெயரிட்டிருக்கிறார்.

Image result for priyanka chopra gets her dog winter jacket

Image result for priyanka chopra gets her dog winter jacket