மஹேல மற்றும் சங்காவின் “Ministry of crab” இந்தியாவில்…

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவுக்கு சொந்தமான  “Ministry of crab” என்ற உணவகத்தின் கிளை ஒன்றை இந்தியாவின் மும்பை நகரத்திலும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் சீனா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டிலும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய கிளையை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவுக்கு சொந்தமான Ministry of crab என்ற உணவகம் உலகின் மிக சிறந்த 50 உணவகங்களுக்குள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.