பிரேசிலில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ள தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை திடீரென உடைந்ததில், அணையில் இருந்த தண்ணீரும், சேறும் பெருக்கெடுத்து வெளியேறியது.
இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதுதவிர அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சேறு நிரம்பியதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வெளியான தகவலின்படி, அணை விபத்தில் உயிரிழப்பு 99 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும், தொழிலாளர்கள், பொதுமக்கள் என 259 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சேறு சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.