அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான பெயர்பட்டியலானது அரச சேவை ஆணைக்குழுவிற்கு…

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலானது இந்த வாரம் அரச சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேர்முகப்பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகள் அடிப்படையிலேயே. அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எந்தவொரு செல்வாக்கு அடிப்படையிலும் அதிபர்கள் தெரிவு செய்யப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிக்காக 302 வெற்றிடங்கள் மாத்திரமே இருக்கின்ற நிலையில், தற்போது 800 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.