மற்றுமொரு ‘சேயா’ நம்மை விட்டும் பிரிகிறாரா…? – 04 வயது சிறுமி காணாமல் போய் இன்றுடன் 03 நாட்கள்…

புத்தளம் – கருவலகஸ்வெவ – நீலபெம்ம பகுதியில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் 04 வயது சிறுமியை தேடும் நடவடிக்கை இன்று(01) 03வது நாளாகவும் தொடரவுள்ளது.

கடந்த 30ம் திகதி குறித்த சிறுமி வீட்டில் இருந்தவாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

டப்ளியு.ஜீ.தெனுரி திசாரா எனும் சிறுமி காணாமல் போகும் போது வீட்டில் அவரது தாத்தா மாத்திரமே இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கலா ஓயாவிற்கு சென்றிருந்த நிலையில், சிறுமி கூச்சலிடும் சத்தம் கேட்டு மீண்டும் திரும்பி வந்து போது அவர் காணாமல் போயிருந்ததாக தாத்தா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.