கொழும்பு – புறக்கோட்டையின் சகல மொத்த வியாபார நிலையங்களையும் இன்று(05) மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத் திணைக்கள பணிப்பாளராக இருந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் இதற்கு இன்றைய தினம்(05) உரிய தீர்வு அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்படாதவிடத்து தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தினை தொடர உள்ளதாகவும் சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.