நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நேற்று(04) ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்ததாகவும் எனினும் அது நடக்காதது பெருமளவு வருத்தமளிப்பதாகவும் குறித்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் நலன் விசாரிக்கும் நோக்கில் நேற்று(04) சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்று திரும்பும் வழியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று(04) விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த போதிலும், அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கு சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.