பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் இன்று(06) உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு நீதியரசர்களான சிசிர தி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட, பிரீதி பத்மன் சுரசேன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று(06) விசாரணைக்கு வந்தது.
இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இன்று காலையே தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதனை ஆராய்ந்து விளக்கமளிக்க காலம் தேவை என்றும் முறைப்பாட்டார்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்து குறித்த ஒத்திவைப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.