துறைமுகத்தின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு அமைச்சர் சாகலவின் ஆலோசனை…

நாடளாவிய ரீதியிலாக அண்மைக் காலமாக மீட்கப்படும் போதைப்பொருள் மீட்புகளுடன், கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு விடயதான அமைச்சர் சாகல ரத்நாயக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை சுங்கம், பொலிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களதும் பாதுகாப்பு பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் ஆணையத்தின் உத்தியோகத்தர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்கால நிலைமையின் படி, துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுப்பது காலத்தின் தேவை என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.