உலகின் அதிசயங்கள் ஏழும் ஒரே இடத்தில்…

இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் உலகின் ஏழு அதிசயங்கள் ஒரே இடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் தாஜ்மஹால், ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்து மீட்பர் சிலை, பாரிசின் ஈஃபில் டவர், ரோம் நாட்டின் கொலோசியம், இத்தாலியின் பிசா சாய்ந்த கோபுரம் மற்றும் கிசாவின் பிரமீடு ஆகியவற்றின் வடிவமைப்புகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வடிவமைப்புகள் ஸ்கிராப் ஆட்டோமொபைல் பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு டெல்லி கார்ப்பரேஷன் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் ஏற்கனவே பழைய சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு பார்வைக்கான சோதனைகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக பல வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தோட்டக்கலை இயக்குனர் அலோக் குமார் கூறியுள்ளார்.

இந்த பார்க் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அடுத்த வாரம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என கூறப்படுகிறது.

The park has 18 sun-tracking solar panels which create electricity to illuminate the exhibits. [Nasir Kachroo/Al Jazeera]

'SDMC provided materials from scrapyards which are otherwise sold in auctions. Around 150 tonnes of waste was used to make the replicas,' an official said. [Nasir Kachroo/Al Jazeera]

SDMC official Puneet Kumar Goel said the idea of the project was inspired by a Bollywood movie. [Nasir Kachroo/Al Jazeera]