இன்று(07) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

ஒலுவில் வயலினை அண்டிய பகுதியில் இன்று(07) அதிகாலை கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தொன்று முச்சக்கரவண்டியுடன் மோதிய விபத்தில், முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற குறித்த பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

அதிக வேகமும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையுமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.