சிலாபத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிலாபம் – நீர்கொழும்பு பேரூந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் – குருநாகல், சிலாபம் – புத்தளம், சிலாபம் – கொழும்பு உள்ளிட்ட 10 வீதிகளில் சேவையில் ஈடுபடும் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.