கொழும்பின் பல பகுதிகளில் இன்று(10) நீர் விநியோக தடை…

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(10) அதிகாலை 4 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜபகிரிய முதல் நாவல திறந்த பல்கலைகழகம் வரையான குறுக்கு வீதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.