மாகந்துரே மதுஷ் இந்தியா செல்ல உதவியதாகக் கருதப்படும் சிவா என்ற நபரைத் தேடி கொச்சிக்கடைப் பிரதேசத்தில் பொலிஸ் விசேட படையணியினர் பரிசோதானைகளை முன்னெடுத்திருந்த போதிலும் சிவா குறித்தப் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை மட்டக்குளி- மாதம்பிட்டி பிரதேசத்தில் வைத்து ‘அந்தரேவத்தே சாமர’ என்ற நபர் பொலிஸ் விசேடப் படையணியால் இன்று(10) காலை கைது செய்யப்பட்டுள்ளாரென்றும், இவர் மாகந்துரே மதுஷுடன் நெருக்கமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரைக் கைது செய்யும் போது, இவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் 5 கிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேடப் படையணியினர் தெரிவித்துள்ளனர்.