சூடான் நாட்டில் இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதுட, 10 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடுக்லி நகரத்தில் இருந்து எல்லையோரம் உள்ள அப்யெய் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர், ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை வளாகத்தினுள் நேற்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதை ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை, ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது.
இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.