கட்டாரின் தேசிய விளையாட்டு தினம் இன்று…

கட்டாரின் தேசிய விளையாட்டு தினம் இன்று (12)கொழும்பில் உள்ள கட்டார் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் கொழும்பு றோயல் கல்லூரியின் விளையாட்டு கட்டட தொகுதியில் நடைபெற்றது.

கட்டாரின் தேசிய விளையாட்டு தினம் 2011 ஆம் ஆண்டு அந்நாட்டு மன்னர் தமீம் பின் ஹம்மத் அல் சானி ஆள் அறிமுகப்படுத்தப்பட்டது.

வருடா வருடம் பெப்ரவரி மாதம் 02 ஆவது வாரம் வரும் செவ்வாய்கிழமை இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்நாட்டு மக்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் பிரகடனம் செய்யப்பட்ட இந்த தினம் அந்நாட்டில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தினத்தில் அந்நாட்டு மக்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் அன்றாட வாழ்வியலில் விளையாட்டு என்பது ஒரு பகுதி என்பதையும் உணர்த்தும் வகையிலும் அந்நாட்டு மக்கள் உட்பட வேலை செய்யும் வெளிநாட்டு பணியாளர்களும் சுற்றுலா பயணிகளும் மைதானங்களுக்கு சென்று விளையாட்டுக்களில் ஈடுபடுவர்.

அந்த வகையில் இன்றைய தினம் காட்டாரின் தேசிய விளையாட்டு தினம் கொழும்பில் உள்ள கட்டார் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் கொழும்பு றோயல் கல்லூரியின் விளையாட்டு திடலில் இடம்பெற்றது,

இலங்கைக்கான கட்டார் தூதுவர் கலாநிதி ராஷித் ஷபீ அல் மர்ரீ இந்நிகழவின் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஏனைய நட்பு நாடுகளின் தூதுவர்கள் தூதுவராலய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.