வீதி இல 163 தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

தெஹிவளை – பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வரை பயணிக்கும், வீதி இல 163 தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் இலவச பயண அட்டையை பயன்படுத்தி வலுகட்டாயகமாக குறித்த பேருந்துகளில் பயணிப்பதாக குற்றம் சுமத்தி அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.