மார்ச் மாதம் நிறைவிற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு இலவசமாக கண்வில்லைகள் வழங்குவதன் மூலம் பாரிய சேவை முன்னெடுக்கப்படுகிறது.
மருந்து பொருட்கள் 73இன் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 27 மருந்துப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார்.