அமல் பெரேராவுக்காக குடும்ப சட்டத்தரணி நேற்று துபாய் சென்றார்.. உதுல் பற்றி தெரியவில்லை – சொஹான் பெரேரா…

தமது குடும்ப சட்டத்தரணி நேற்று இரவு துபாய் நோக்கி பயணித்ததாக பிரபல பாடகர் அமல் பெரேராவின் சகோதரர் சொஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

துபாயில் அண்மையில் கைதான தனது சகோதரர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஏற்ற சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அவர் இவ்வாறு துபாய் பயணமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அமல் பெரேராவுக்காக முன்னிற்க இலங்கையில் இருந்து துபாய் சென்ற சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன சென்றிருந்த போதிலும், சொஹான் பெரேரா அது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.