ரௌடி பேபி பாடலின் புதிய சாதனை…

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ‘ரௌடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது வரை ரௌடி பேபி பாடலை 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரௌடி பேபி’ பாடல் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது